Home காலச்சுவடுகள் ஜல்காரிபாய், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை பிறப்பு நவம்பர் 22, 1830

ஜல்காரிபாய், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை பிறப்பு நவம்பர் 22, 1830

285
0

ஜல்காரிபாய், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை பிறப்பு நவம்பர் 22, 1830

  • சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள போல்ஜா என்ற கிராமத்தில் பிறந்தார்.
  • இவர் சிறுவயதிலேயே குதிரையேற்றம்இ வாள்வீச்சு உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஜான்சி ராணி லட்சுமிபாய் இவரது போர்த்திறன்இ துணிச்சல் வீரத்தைக் கண்டு ஆச்சரியமடைந்துஇ ஜல்காரிபாயை தன் படையில் சேர்த்துக்கொண்டார்.
  • ஜான்சி கோட்டையின் மீது ஆங்கில அரசு பலமுறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் படையெடுப்புகளை ஜான்சி ராணியின் வீரப்படை முறியடித்தது. அதில் இவரது பங்கு முக்கியமானது.
  • 1857ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரின்போதுஇ மிகப்பெரிய படையுடன் ஆங்கில அரசு ஜான்சியை முற்றுகையிட்டது. கல்பி என்ற இடத்தில்இ மற்ற புரட்சிப் படைகளுடன் இணைவதாகத் திட்டமிட்டிருந்த ஜான்சி ராணிக்குஇ பெரிய படையை எதிர்த்துப் போரிடுவது சவாலாக இருந்தது.
  • ராணி வேடத்தில் தானே முன்னின்று போரிடுவதாக கூறிய ஜல்காரிபாய்இ தந்திரமாக ராணியை கோட்டையில் இருந்து தப்ப வைத்தார். அதே நேரத்தில் ஜான்சி படைக்குத் தலைமை வகித்து வீரத்துடன் போரிட்டார். ஆனால்இ மாபெரும் படையை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளிடம் பிடிபட்டார்.
  • ஜான்சி ராணியை பிடித்துவிட்டதாக கூறிய ஆங்கில அரசு ஜல்காரிபாயிடம் ‘உங்களை என்ன செய்வது?’ என்று கேட்டனர். அதற்கு ‘தூக்கிலிடுங்கள்’ என்றார். பின்னர்இ அவர் ராணி அல்ல என்ற உண்மையை அறிந்த ஆங்கில அரசுஇ அவரது வீரத்தையும்இ விவேகத்தையும் பாராட்டி விடுதலை செய்தது.
  • ஜல்காரிபாய் 1858ஆம் ஆண்டு ஜான்சி போரின்போது வீரமரணம் அடைந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here