Home காலச்சுவடுகள் இந்திய பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள் – டிச.13, 2001

இந்திய பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள் – டிச.13, 2001

176
0

இந்திய பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள் – டிச.13, 2001

இந்திய பாராளுமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் சராமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாளில் டெல்லி பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அப்போது சரியாக 11.40 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் சராமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். மின்னல் வேகத்தில் இயங்கிய மத்திய ரிசர்வ் போலீசாரும், இந்திய திபெத் எல்லை போலீஸ் படையினரும், டெல்லி போலீசாரும் பாராளுமன்றத்திற்கு அரணாக நின்று இந்த தாக்குதலை எதிர்கொண்டனர்.

தீவிரவாதிகளின் துப்பாக்கி தாக்குதலுக்கு பதிலடி கொடக்க துவங்கினர். பாராளுமன்றத்தில் எல்லா கதவுகளும் மூடப்பட்டன. தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சுமார் இருபது நிமிடங்கள் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திய ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்புப் படையை சேர்ந்த 9 பேர் தங்களது உயிரை தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமத் ஆகிய இயக்கங்கள் பொறுப்பேற்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here