Home சுற்றுலாத்ததலங்கள் குன்றக்குடி முருகன் கோயில் – காரைக்குடி

குன்றக்குடி முருகன் கோயில் – காரைக்குடி

158
0

குன்றக்குடி முருகன் கோயில்

குன்றக்குடி முருகன் கோயில், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி எனும் ஊரின் குன்றின் உச்சியில் சண்முகநாதர், வள்ளி – தெய்வானையுடன், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இக்கோயிலில் குடிகொண்ட முருகனை குறித்து அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளார்.

மதுரையிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குன்றக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பிள்ளையார்பட்டி கோயில் உள்ளது.

கி.பி. 1780-களில் சிவகங்கைச் சீமையை அரசாண்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் பல்வேறு கட்டங்களில் சுதந்திரப் போர் புரிந்து, இறுதியில் 1801-ல் துக்கிலிடப்பட்டவர்கள் பெரிய மருதுவும், அவர் தம்பி சின்ன மருதுவும்.

ஒருமுறை பெரிய மருதபாண்டியருக்கு பிளவை என்னும் நோய் ஏற்பட்டு, எவ்வளவு ராஜ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. வலி அதிகமாக இருந்ததால் துடித்துப் போனார்.

இந்த நிலையில் பெரிய மருதுவைப் பார்க்க வந்த ஒரு முருக பக்தர் பிரார்த்தித்துக் கொண்டு திருநீறு பூசினால் குணமாகும்’ என்று தெரிவித்தார்.

உப்பு வாணிகம் செய்து கொண்டிருந்த காடன் செட்டியார் என்பவரை அழைத்து வந்தார்கள். அவர் தனது குலதெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு விபூதி பூசிவிட்டு கூட இருந்து உதவினார். ஓரிரு தினங்களில் பிளவைக் கட்டி உடைந்து வலி நீங்கியது.

நோய் குணமான நெகிழ்ச்சியில் இருந்த பெரிய மருது, காடன் செட்டியாரின் குலதெய்வமான குன்றக்குடி ஆறுமுகனைப் பார்க்க விரும்பினார். சுற்றிலும் புதர் மண்டி, கவனிப்பின்றி இருந்த குன்றக்குடி மலைக் கோவிலைப் பார்வையிட்டு, திருப்பணிகளை செய்யத் தொடங்கினார். தாம் வந்து தங்கி பணிகளைப் பார்வையிட வசதியாக குன்றக்குடியில் ஒரு சிறிய அரண்மனையையும் நிறுவினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here