Home ஆன்மீகம் பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

153
0

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு தைப்பூச திருவிழா தொடங்கவுள்ளதையொட்டி பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் நேற்று பழனிக்கு வந்தனர். இதனால் அதிகாலை முதலே மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் அடிவார பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் பாதவிநாயகர் கோவில் அருகிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகமாக இருந்தது. மலைக்கோவில் பிரகாரமும் நேற்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கிரிவீதியில் மயில், தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதுமட்டுமின்றி பழனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்காக வந்த அய்யப்ப பக்தர்களும் நேற்று மலைக்கோவிலில் குவிந்தனர். பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. இதனால் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி முருகன் கோவிலில் பொது, சிறப்பு மற்றும் கட்டண தரிசன வழிகளில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற் காக கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களில் பலர் நேற்று அந்த தடுப்புகளின் அடியில் உள்ள சிறிய இடைவெளி வழியாக வெளியே வருவதும், உள்ளே செல்வதுமாக இருந்தனர். இதனால் வரிசையில் நிற்கிற மற்ற பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு, தடுப்புகள் சரிந்து பக்தர்கள் மேல் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாவலர்கள், இவர்களை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here