Home ஆன்மீகம் தீபாவளி சார்ந்த நம்பிக்கைகள்

தீபாவளி சார்ந்த நம்பிக்கைகள்

165
0

தீபாவளி சார்ந்த நம்பிக்கைகள்

இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த

விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பூஜைகளும் பண்டிகைகளும் கொண்டாட்ட மகிழ்ச்சியை தரும் என்பதுடன் நமது வாழ்வின் வளங்கள் பன்மடங்கு பெருகுவதற்கும், ஆரோக்கியத்தை பெறுவதற்குமான முயற்சிகள்தான். சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் என்பது பெரும்பாலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களால் தான் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இறை நம்பிக்கை என்பதுடன், தொடர்ந்து வாழ்வை நகர்த்த மேம்பட்ட முயற்சியாகவும்தான் கொள்ள வேண்டும்.

அது போல் தீபாவளி பண்டிகை சமயத்திலும் சில சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி சமயத்தில் செய்யப்படும் இந்த தீர்வுக்கான முயற்சிகள் என்பது ஓம் வரைவது, சங்கு ஒலிக்க செய்வது, விநாயகர் – லட்சுமி மந்திரங்கள், கரும்பு வேர் வணங்குவது, தாமரை மலரால் பூஜை செய்வது போன்றவாறு உள்ளன. இவற்றை தீபாவளி சமயத்தில் செய்யும் போது நமது வறுமை நிலை ஒழிந்து செல்வ நிலை மேம்பாடு அடையும் என்பதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக தீபாவளி பூஜையோடு இந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களை மேற்கொள்ளும் பழக்கம் பலரிடமும் இருந்து வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here