Home ஆன்மீகம் அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் இன்றுடன் நிறைவு

அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் இன்றுடன் நிறைவு

137
0

அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் இன்றுடன் நிறைவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11-ம் நாளான இன்று திங்கட்கிழமையுடன் நிறைவடைகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி கடந்த 23-ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். இதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், திரி ஆகியவை தினமும் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

மகா தீபத்தன்று நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள், மகா தீபம் ஏற்றப்படும் மற்ற நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து தீபத்தை தரிசிப்பது வழக்கம். இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் பக்தர்கள் மகா தீபம் ஏற்றப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரம் ஆனது.

இந்த நிலையில் மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11-ம் நாளான இன்று திங்கட்கிழமையுடன் நிறைவடைகிறது. நாளை காலை மகா தீப கொப்பரை, மலையில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும்.

வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று, தீப மை அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு அணிவிக்கப்படும்.

பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீப மை கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here