Home சிறப்பு தகவல்கள் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஜிசாட்- 7ஏவை அனுப்பும் இஸ்ரோ.!

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஜிசாட்- 7ஏவை அனுப்பும் இஸ்ரோ.!

184
0

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஜிசாட்- 7ஏவை அனுப்பும் இஸ்ரோ.!

இஸ்ரோ நிறுவனம் சார்பில் நாளை மாலை 4.10க்கு ஜிஎஸ்எல்வி-எப்-ராக்கெட்டில் ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோள் அனுப்படுகின்றது.

இது இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக அனுப்படுகின்றது. சத்தீஸ்தவான் விண்வெளிய ஆய்வு மையத்தில் இதற்கான கவுண்டன்ட் துவங்கியது.

இந்திய விமானப்படை:

இந்திய விமானப்படை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதன் தகவல் தொடர்பு தனித்துவமாக இருக்கின்றது.

போர் பயன்பாட்டிற்காகவும், தற்காப்பு, இயற்கை சீற்றங்களுக்கு உதவுவதற்காகவும் தகவல் தொடர்பு விமானப்படைக்கு முக்கிய அவசியமாகின்றது. இதற்காக ஜிசாட் 7ஏ ராக்கெட் அனுப்படுகின்றது.

3 நிலையில் ஜிஎஸ்எல்வி:

3 நிலை கொண்ட ஜிஎஸ்எல்வி-எப்11 ராக்கெட்டின் முதல்நிலையில் திட எரிபொருளும், 2ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. 3 வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்ட கிரையேஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

எடை  415.6 டன் :

49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜிஎஸ்எல்வி எப்-11 ராக்கெட் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்படுகின்றது. 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7 ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும்.

ரேடார் நிலையங்களுக்கு இணைப்பு:

இது இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் ரேடார் நிலையங்கள், விமான தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்தும். இது முழுவதும் Ku-Band பயனாளர்களின் தொலைத்தொடர்புக்கு உதவக்கூடியது.

இஸ்ரோ அர்ப்பணிப்பு:

இந்திய ராணுவத்துக்கு இஸ்ரோ அர்ப்பணிக்க உள்ளது. இந்த செயற்கைகோளை சுமந்துசெல்ல உள்ள ஜி.எஸ்.எல்.வி எப் 11 ராக்கெட்டானது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 13வது ராக்கெட் ஆகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here