Home சிறப்பு தகவல்கள் ஒட்டுண்ணி புழு முட்டைகளை ஜாரில் கொண்டு சென்ற பில் கேட்ஸ், ஏன்?

ஒட்டுண்ணி புழு முட்டைகளை ஜாரில் கொண்டு சென்ற பில் கேட்ஸ், ஏன்?

171
0

ஒட்டுண்ணி புழு முட்டைகளை ஜாரில் கொண்டு சென்ற பில் கேட்ஸ், ஏன்?

சீனாவின் தலை நகரமான பெய்ஜிங்கில் நடந்த ஒரு நிகழ்வில், அமெரிக்க பில்லியனர் ஆன பில் கேட்ஸ் அவரின் தொண்டு நிறுவனத்தின் பெயரின் கீழ் கலந்து கொண்டார். உடன் ஒரு நம்ப முடியாத பொருளையும் கையேடு கொண்டு வந்தார்.

அதாவது பில் கேட்ஸ் ஒரு ஜாரில் சில கழிவுகளை கொண்டு வந்தார். என்னது கழிவுகளா? பில் கேட்ஸிற்கு என்ன மனநிலை சரி இல்லையா என்று கேட்க ஆரம்பித்து விடாதீர்கள். அவர் கொண்டு வந்த ஜாருக்குள் இருந்த கழிவுகளின் வழியாக தான் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பின் செயல்முறை வெளிப்பட்டது. அதென்ன கண்டுபிடிப்பு? அப்படி என்ன அற்புதத்தை அது நிகழ்த்துகிறது?

பில் கேட்ஸ் ஒரு புதிய செயல்முறையின் அல்லது தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் ஒரு கழிப்பறையை / டாய்லெட் கருவியை உருவாக்கி உள்ளார். இதற்காக அவர் செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா? – சுமார் ஆயிரத்து நானூற்று அறுபது கோடி ஆகும்.

எதனால் இவ்வளவு செலவு?

உடனே, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஒரு தேசம் முழுவதுமே கழிப்பறைகளை கட்டலாமே, ஏன் ஒற்றை டாய்லெட்டை கட்டமைக்க வேண்டும்? இதென்ன பண திமிரா? கொழுப்பு எடுத்து அலைகிறாரா பில் கேட்ஸ்? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட வேண்டாம். இந்த 1460 கோடி ரூபாயும் செலவு வெறும் அல்ல, மாபெரும் வரவு என்று சொன்னால் நம்புவீர்களா? எல்லாவற்றிற்கும் மேலாக இந்த டாய்லெட் கருவி மூலம் பல உயிர் சேதங்கள் தடுக்கப்படும் என்று கூறினால் நம்புவீர்களா?

நம்பித்தான் ஆக வேண்டும்!

பில் கேட்ஸ் உருவாக்கிய உள்ள இந்த டாய்லெட் ஆனது முழுக்க முழுக்க சாக்கடைகளின் தேவை இல்லாமல் செயல்படும் ஒரு கருவியாகும்.ரீ இன்வென்டட் டாய்லெட் எக்ஸ்போ (Reinvented Toilet Expo) நிகழ்ச்சியில் பேசிய பில் கேட்ஸ், வளரும் நாடுகளுக்கான ஒரு பொருளாதார கழிப்பறையை உருவாக்கும் இந்த பணியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கிற்காக நன்றி தெரிவித்து கொண்டார்.

குறைந்தபட்சம் 200 மில்லியனை டாலர்கள்!

இதற்காக, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸின் தொண்டு நிறுவனம் சுமார் 200 மில்லியன் டாலர்களை ஆராய்ச்சி திட்டங்களுக்காக நிதி அளித்துள்ளன என்பதும்,கழிப்பறை தயார் செய்யப்படுவதற்கு முன்னதாக குறைந்தபட்சம் 200 மில்லியனை டாலர்களை செலவு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்க படுகிறது. செலவின் பலத்திற்கு, கருத்தாக்கம் பெற்றுள்ள டாய்லெட் கருவியும் ஈடு கொடுக்கிறது.

அந்த ஜாரில் இருந்தது என்ன?

ஆம், பில் கேட்ஸ் கொண்டு வந்த கழிவுகள் ஜாரில், 200 ட்ரில்லியன் ரோட்டாவிரஸ செல்கள், 20 பில்லியன் ஷிகெல்லா பாக்டீரியாக்கள் மற்றும் 100,000 ஒட்டுண்ணி புழு முட்டைகள் அடங்கி இருந்தது. அதை பில் கேட்ஸே கூறினார். பின் இந்த டாய்லெட் மோசமான சூழலால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உருவானது என்கிற விளக்கத்தையும் கூறினார்.

பில் கேட்ஸின் அற்புதமான எண்ணம்!

மேலும் குறிப்பிட்ட நோய் தாக்குதலால் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட 50,000 குழந்தைகள் இறந்து போகிறார்கள், இதனால் உலக நாடுகளுக்கு ஆண்டுதோறும் 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சுகாதார செலவுகளை சந்திக்கிறது, உடன் வருவாயை இழக்கிறது என்கிற புள்ளி விவரங்களையும் அடுக்கினார். இந்த அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் கீழ் உருவானதே இந்த 1000 கோடி ரூபாய் டாய்லெட் என்று முடிக்க, பில் கேட்ஸின் அற்புதமான எண்ணம் வெளிப்பட்டது.

செயல்முறையை எளிதாக்குகிறது!

சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத இடங்களையும், சாக்கடை அமைப்புகளை அமைப்பதற்கு சாத்தியமற்றதாக பகுதிகளையும் பில் கேட்ஸின் இந்த டாய்லெட் கருவி குறி வைக்கிறது. தற்போதைக்கு பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகள் ஆனது, வெறுமனே நீரின் வழியாக கழிவுகளை அனுப்புகிறது, அந்த சந்தர்ப்பத்தில் திரவங்களும், திடப்பொருளும் வேதியியல் வேலையை செய்து, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எரிதலை நிகழ்த்துகின்றன. அந்த செயல்முறையை இந்த புதிய டாய்லெட் எளிதாக்குகிறது.

உரமாகவும், ஹைட்ரஜனாகவும்!

அதாவது இதில் உள்ள எலெக்ட்ரோ கெமிக்கல் ரியாக்டர் ஆனது நீர் மற்றும் மனித கழிவுகளை வயல்வெளிகளுக்கான உரமாகவும், ஹைட்ரஜன் ஆகவும் மாற்றுகிறது. அதை ஹைட்ரஜன் எரிபொருள் செல்களாக அதாவது ஒரு பச்சை எரிசக்தி ஆதாரமாகவும் சேமிக்க முடியும். மேலும் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான தண்ணீரை கூட மாற்றியமைக்க அல்லது நீர்ப்பாசனம் செய்ய மறுபடியும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கெல்லாம் பயன்படுத்தப்படும்?

இந்த யோசனை ஆனது முதலில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அடுக்குமாடி வளாகங்கள் போன்ற இடங்களில் நிறுவப்பட உள்ளது. மலிவான விலையை எட்டிய பின்னர், தனித்தனி வீடுகளுக்குள்ளும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here