Home மகளிர் மட்டும் வயிறு உபாதைகளை போக்கும் சுக்கு குழம்பு

வயிறு உபாதைகளை போக்கும் சுக்கு குழம்பு

167
0

வயிறு உபாதைகளை போக்கும் சுக்கு குழம்பு

தேவையான பொருட்கள் :

சுக்கு – ஒரு சிறிய துண்டு,

மிளகு – 2 டீஸ்பூன்,

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,

கடுகு, உளுந்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,

சின்ன வெங்காயம் – 200 கிராம்,

தக்காளி – 2,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  • புளியை நன்றாக கரைத்து     கொள்ளவும்.
  • தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • சின்ன வெங்காயம் சிறிது வதங்கியதும் இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு     வதக்கவும்.
  • தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
  • சூப்பரான சுக்கு குழம்பு ரெடி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here