Home மகளிர் மட்டும் வயதானர்களுக்கு சத்தான முளைகட்டிய பயறு கிச்சடி தேவையான பொருட்கள் : ...

வயதானர்களுக்கு சத்தான முளைகட்டிய பயறு கிச்சடி தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப், முளை கட்டிய பாசிப்பயறு – அரை கப், தேங்காய் துருவல் – அரை மூடி, தனியாத்தூள் – 4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், வெங்காயம் – 2 பெருங்காய

176
0

வயதானர்களுக்கு சத்தான முளைகட்டிய பயறு கிச்சடி

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – ஒரு கப்,
முளை கட்டிய பாசிப்பயறு – அரை கப்,
தேங்காய் துருவல் – அரை மூடி,
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
வெங்காயம் – 2
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
தண்ணீர் – ஒன்றரை கப்,
கொத்தமல்லித்தழை – 4 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – 8,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • முந்திரியை வறுத்து கொள்ளவும்.
  • குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • அடுத்து அதில் அரிசியைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • அதில் முளைகட்டிய பயறு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடி வேக விடவும்.
  • இரண்டு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.
  • சூப்பரான சத்தான முளைகட்டிய பயறு கிச்சடி ரெடி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here