Home மகளிர் மட்டும் முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு தயார் எப்படி

முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு தயார் எப்படி

181
0

முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு தயார் எப்படி?

தேவையான பொருட்கள்

முட்டை-4

எண்ணெய் -தேவையான அளவு

வெங்காயம் -2

தக்காளி-1

பச்சை மிளகாய்-2

புளி -எலுமிச்சை காய் அளவு

மஞ்சத்தூள்-அரை ஸ்பூன்

மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்

கொத்தமல்லித்தூள் -அரை ஸ்பூன்

சோம்பு-அரை ஸ்பூன்

தேங்காய்-சிறிதளவு

உப்பு-தேவையான அளவு

அரைக்க வேண்டிய பொருட்கள்:

காய்ந்த மிளகாய்-2 மிளகு-அரை ஸ்பூன் சீரகம்-1 ஸ்பூன் தாளிக்க வேண்டியவை பொருட்கள்: கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4டீஸ்பூன் வெந்தயம்-1/4டீஸ்பூன் கறிவேப்பிலை-1 கொத்து

எப்படி செய்வது

முதலில் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக அறிந்து வைத்துக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள மிளகாய் ,சீரகம்,மிளகு இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.பின்பு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

பின்பு சோம்பையும்,தேங்காவையும் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு முட்டை,உப்பு, மற்றும் அரைத்து வைத்துள்ள (மிளகாய்,சீரகம்,மிளகு)பொடியைப் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.பின்பு தோசைக் கல்லில் எண்ணையை ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி சிவந்ததும்,அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஆம்லெட் செய்துகொள்ளவும்.

பின்பு முட்டை ஆம்லேட்ஐ நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு புளிச் சாரையுடன்,மஞ்சத்தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,உப்பு சேர்த்து அதில் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும்.பின்பு நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது [தேங்காய் + சீரகம்] சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

இறக்கும்பொழுது சிறிது மணித்துளிகள் முன்பு வெட்டி வைத்த ஆம்லெட் துண்டுகளைப் போட்டு இறக்கவும். சுவையான முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு ரெடி.!!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here