Home மகளிர் மட்டும் மாலை நேர சிற்றுண்டி சாமை கொழுக்கட்டை

மாலை நேர சிற்றுண்டி சாமை கொழுக்கட்டை

165
0
மாலை நேர சிற்றுண்டி சாமை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி மாவு – 150 கிராம்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் – இரண்டு
கறிவேப்பிலை – 2 கொத்து
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

  • முந்திரியை சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • தேங்காயை சிறிது துண்களாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அடுத்து அதில் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும்.
  • இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேகவிடவும்.
  • புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.

பலன்கள்:

நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாகச் செய்து தரலாம். சட்னி சேர்ப்பதால், அதில் உள்ள சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here