Home மகளிர் மட்டும் சூப்பரான முட்டை பிரியாணி செய்வது எப்படி

சூப்பரான முட்டை பிரியாணி செய்வது எப்படி

173
0

சூப்பரான முட்டை பிரியாணி செய்வது எப்படி?

தேவையான    பொருட்கள் :

பாசுமதி அரிசி – அரை     கிலோ,

முட்டை – 10,

தக்காளி – 4,

பெரிய வெங்காயம் – 3,

கடைந்த தயிர் – 1    கப்,

எண்ணெய் – அரை   கப்,

நெய் – கால்    கப்,

உப்பு – 2   டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – கால்   டீஸ்பூன்,

இஞ்சி + பூண்டு விழுது – 4 டீஸ்பூன்.

அரைக்க:

பட்டை –  2,

லவங்கம் –     2,

ஏலக்காய் –     6,

பச்சை மிளகாய் –    5,

புதினா – ஒரு   கைப்பிடி,

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

செய்முறை:

  • வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அரிசியைக் நன்றாக கழுவி    ஊறவிடவும்.
  • அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை   விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து  வையுங்கள்.
  • அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக  வெட்டுங்கள்.
  • அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு  வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும்.
  • எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.
  • இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி  பரிமாறவும்.
  • சூப்பரான முட்டை பிரியாணி ரெடி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here