Home மகளிர் மட்டும் சூப்பரான மதிய உணவு புளிச்ச கீரை சாதம்

சூப்பரான மதிய உணவு புளிச்ச கீரை சாதம்

162
0

சூப்பரான மதிய உணவு புளிச்ச கீரை சாதம்

தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் – 2 கப்

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – சிறிதளவு

உளுத்தம் பருப்பு – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – இரண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க :

வெங்காயம் – இரண்டு

பூண்டு – பத்து பல்

மிளகு – ஒரு ஸ்பூன்,

பச்சை மிளகாய் – 6

புளிச்ச கீரை – 1 கட்டு

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

  • கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து     கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு    வதக்கவும்.
  • அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். (புளிச்ச கீரை என்பதால் உப்பு கொஞ்சம் அளவாக’ போடவும்)
  • கீரை நன்றாக வதங்கியவுடன் அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி     பரிமாறவும்.
  • சூப்பரான புளிச்ச கீரை சாதம் ரெடி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here