Home மகளிர் மட்டும் சுவையான மைசூர் பாக் தயார் செய்வது எப்படி

சுவையான மைசூர் பாக் தயார் செய்வது எப்படி

178
0

சுவையான மைசூர் பாக் தயார் செய்வது எப்படி

என்னென்ன தேவை?

கடலை மாவு – ஒரு கப்
சர்க்கரை – ஒன்றே கால் கப்
எண்ணெய், நெய் – தலா அரை கப்.

எப்படிச் செய்வது?

2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி கடலை மாவுடன் சேர்த்து, கட்டியில்லாமல் உதிர் உதிராக பிசிறவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும் (ஒரு கம்பி பாகு). மற்றொறு கடாயில் நெய்யுடன் எண்ணெய் சேர்த்துசூடாக்கவும்.

பாகு வைத்த அடுப்பின் தீயைக் குறைத்து மாவை சிறிது சிறிதாக பாகில் சேர்த்துக் கிளறவும். பின்பு சூடாக இருக்கும் நெய் – எண்ணெய் கலவையை ஊற்றிக்கொண்டே கை விடாமல் கிளறவும். மாவு வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் போட்டு, சிறிது ஆறிய பின் துண்டுகள் போடவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here