Home மகளிர் மட்டும் சுவையான சூப்பரான தூத்பேடா செய்வது எப்படி?

சுவையான சூப்பரான தூத்பேடா செய்வது எப்படி?

155
0

சுவையான சூப்பரான தூத்பேடா செய்வது எப்படி?

என்னென்ன தேவை?
பால் – ஒரு லிட்டர்
சோள மாவு – 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – 2 கப்,
எசன்ஸ் – சில துளிகள் (விருப்பமான ஃபிளேவர்)
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அடி கனமான பாத்திரம் ஒன்று எடுத்து பாலை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து அடிபிடிக்காமல் காய்ச்சவும் . நன்றாக சுண்டி மூன்றில் ஒரு பங்கு வந்த பின் சோள மாவை சிறிதளவு பாலில் கரைத்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேர்க்கவும். கட்டி தட்டாமல் கிளறவும். மாவு வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள், எசன்ஸ் கலந்து சர்க்கரை பூத்து வந்ததும் இறக்கிவிடவும். இக்கலவை சிறிது நேரத்திலேயே இறுகத் தொடங்கும். அப்போது உருண்டையாக பிடித்து, நடுவில் அழுத்தி தூத்பேடா வடிவம் தரவும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here