Home மகளிர் மட்டும் சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தயிர் வெண்டைக்காய்

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தயிர் வெண்டைக்காய்

163
0

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தயிர் வெண்டைக்காய்

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் – கால் கிலோ,
தக்காளி – ஒன்று,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயம் – 2,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
தயிர் – ஒரு கப்,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.
  • வெண்டைக்காயை கழுவி துடைக்கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும்.
  • தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், கொத்தமல்லி, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
  • இந்த கலவையை கீறிய வெண்டைக்காயில் தடவவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும்.
  • கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
  • பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
  • அனைத்தும் நன்றாக சேர்ந்து வந்ததும அதில் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து… தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை அதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here