Home மகளிர் மட்டும் சத்து நிறைந்த வரகு – கேழ்வரகு தோசை

சத்து நிறைந்த வரகு – கேழ்வரகு தோசை

175
0

சத்து நிறைந்த வரகு – கேழ்வரகு தோசை

தேவையான பொருட்கள் :

வரகு அரிசி – 200 கிராம்
கோதுமை – 100 கிராம்
கேழ்வரகு – 100 கிராம்
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
வெந்தயம் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
நெய் (அ) நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வரகு அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரைந்த எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும்.
  • இந்த மாவில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
  • மிகவும் சத்தான வரகு – கேழ்வரகு தோசை ரெடி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here