Home மகளிர் மட்டும் சத்து நிறைந்த கேழ்வரகு – பீட்ரூட் தோசை

சத்து நிறைந்த கேழ்வரகு – பீட்ரூட் தோசை

196
0

சத்து நிறைந்த கேழ்வரகு – பீட்ரூட் தோசை

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்,

உப்பு – தேவைக்கேற்ப,

ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு – கால் கப்,

துருவிய பீட்ரூட் – கால் கப்,

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 3,

எண்ணெய் – தாளிக்க + தோசை சுடுவதற்கு தேவையான அளவு

செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம்  வைக்கவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு     வதக்கவும்.
  • வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • சத்து மிகுந்த கேழ்வரகு – பீட்ரூட் தோசை ரெடி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here