Home மகளிர் மட்டும் சத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சூப்

சத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சூப்

202
0

சத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சூப்

தேவையான பொருட்கள் :

முருங்கை இலை – 2 கப்
கேரட் துருவல் – அரைகப்
தேங்காய் துருவல் – அரை கப்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி துண்டுகள் – 3
பூண்டு – 1
கொத்தமல்லி இலை – ஒரு பிடி
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிதளவு

செய்முறை :

  • முருங்கை இலையை நார் இல்லாத அளவுக்கு சுத்தமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பெரிய வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • நெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்.
  • கேரட் துருவல், தேங்காய் துருவல், பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை போன்றவைகளை ஒன்றாக்கி அதில் ஐந்து கப் தண்ணீர் விட்டு கொதிக்கவையுங்கள். வெந்து வரும்போது தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • வாணலியை சூடாக்கி நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், முருங்கை இலையைக் கொட்டி லேசாக வதக்குங்கள்.
  • அடுத்து அதில் வேகவைத்த பொருட்களையும் ஒன்றாக்கி மிக்சியில் போட்டு ஓடவிடுங்கள்.
  • அதில் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் சூப்பையும் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள்.
  • அத்துடன் மிளகுதூள், காயத்தூள், உப்பு போன்றவைகளைச் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
  • சத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சூப் தயார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here