Home மகளிர் மட்டும் சத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம்

சத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம்

188
0

சத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம்

தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி மாவு – ஒரு கப்,
கோதுமை மாவு – கால் கப்,
வாழைப்பழம் – 2,
பொடித்த வெல்லம் – அரை கப்,
தேங்காய் துருவல் – கால் கப்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய் (அ) நெய் – தேவையான அளவு.

செய்முறை:

  • சிவப்பு அரிசி மாவு, கோதுமை மாவு, வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
  • அரைத்த கலவையுடன் தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும்.
  • குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் அல்லது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
  • சத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம் ரெடி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here