Home மகளிர் மட்டும் சத்தான வேர்க்கடலை – உருளைக்கிழங்கு கட்லெட்

சத்தான வேர்க்கடலை – உருளைக்கிழங்கு கட்லெட்

161
0

சத்தான வேர்க்கடலை – உருளைக்கிழங்கு கட்லெட்

தேவையான பொருட்கள் :

காய்ந்த வேர்க்கடலை – ஒரு கப்,
உருளைக்கிழங்கு – 2,
பிரெட் துண்டுகள் – 3,
பச்சைமிளகாய் – 4,
இஞ்சி – ஒரு துண்டு,
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி,
பிரெட் தூள் – ஒரு கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  • உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்.
  • வேர்க்கடலையை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை விழுதாக அரைக்கவும்.
  • பிரெட் துண்டுகளை தண்ணீரில் போட்டு, உடனே எடுத்துப் பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
  • இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, வைக்கவும். இவ்வாறு அனைத்திலும் செய்யவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
  • வேர்க்கடலை – உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here