Home மகளிர் மட்டும் சத்தான மாலை நேர டிபன் வெஜிடபிள் கொழுக்கட்டை

சத்தான மாலை நேர டிபன் வெஜிடபிள் கொழுக்கட்டை

211
0

சத்தான மாலை நேர டிபன் வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – ஒரு கப்,
முட்டைகோஸ் துருவல் – சிறிய துண்டு,
கேரட் துருவல் – 2,
கொத்தமல்லி இலை – சிறிதளவு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 1,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  • கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கேரட், கோஸை துருவிக்கொள்ளவும்.
  • கடாயில் தேவையான அளவு தண்ணீர் விட்டு.. சிறிதளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். அதில் அரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து வைக்கவும்.
  • கடாயில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் முட்டைகோஸ், கேரட் துருவல், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து சுருள கிளறவும்.
  • காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் மிளகுத்தூள் கலந்து இறக்கவும். இதுதான் பூரணம்.
  • கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் இந்த பூரணம் வைத்து மூடவும். அவைத்து மாவிலும் இதை செய்து வைக்கவும்.
  • இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து செய்து வைத்த கொழுக்கட்டைகளை அதில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
  • சத்தான மாலை நேர டிபன் வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here