Home மகளிர் மட்டும் சத்தான டிபன் சோள ரவை வெண் பொங்கல்

சத்தான டிபன் சோள ரவை வெண் பொங்கல்

175
0

சத்தான டிபன் சோள ரவை வெண் பொங்கல்

தேவையான பொருட்கள் :

சோள ரவை – ஒரு கப்,

பாசிப் பருப்பு – கால் கப்,

இஞ்சி – சிறிய துண்டு,

மிளகு, சீரகம் – தலா கால் தேக்கரண்டி,

நெய் – ஒரு மேஜைக்கரண்டி,

கறிவேப்பிலை – சிறிது,

உப்பு – சுவைக்கேற்ப,

எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, முந்திரி – 6.

செய்முறை:

  • இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
  • பாசிப் பருப்பு, சோள ரவையை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்க     வேண்டும்.
  • குக்கரில் 3 கப் நீர்விட்டு கொதிக்கவிட     வேண்டும்.
  • நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ரவை, பருப்பு, உப்பு சேர்த்து, குழைய வேகவைக்க    வேண்டும்.
  • மற்றொரு வாணலியில் நெய்விட்டு, சூடாக்கி முந்திரி, சீரகம், மிளகு, துருவிய இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து வெந்த சோள ரவைப் பொங்கலில் சேர்த்துக்     கிளறவும்.
  • சூப்பரான சத்தான டிபன் சோள ரவைப் பொங்கல் ரெடி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here