Home மகளிர் மட்டும் கூந்தல்மாஸ்க்

கூந்தல்மாஸ்க்

206
0

கூந்தல்மாஸ்க்:

பழுத்தபப்பாளி-ஒருகப்
தயிர்-அரைகப்

பப்பாளியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. அதோடு விட்டமின்களும் உள்ளது. இவை கூந்தலுக்கு போஷாக்கு அளித்து, பாதிப்பினை சரி செய்கிறது.

கூந்தலின் அமில காரத் தன்மையையும் சமன் செய்கிறது. தயிர் இயற்கையிலேயே ஈரப்பதத்தை கூந்தலுக்கு அளிக்கிறது. அது ஸ்கால்ப்பில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்கிறது.

பப்பாளியை நன்றாக மசித்து அதனுடன் தயிர் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து, ஸ்கால்ப்பில் போடவும். கூந்தல் நுனி வரை போட வேண்டும்.

30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலசவும். அடர்த்தி குறைவான ஷாம்புவை உபயோகப்படுத்தவும்.

வாரம் இரு முறை செய்தால் இரு வாரங்களுக்குள் நுனி பிளவு நின்று கூந்தல் மிருதுவாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here