Home மகளிர் மட்டும் கலக்கலான மும்பை ஸ்டைல் பேல் பூரி

கலக்கலான மும்பை ஸ்டைல் பேல் பூரி

174
0

கலக்கலான மும்பை ஸ்டைல் பேல் பூரி

தேவையான பொருட்கள் :

பொரி – 2 கப்
ஓமப்பொடி – 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
தட்டுவடை – 6
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
உருளைக்கிழங்கு – 2
புதினா/கொத்தமல்லி சட்னி – தேவையான அளவு
தக்காளி சாஸ் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் – ¼ டீஸ்பூன்
சாட் மசாலா – ¼ டீஸ்பூன்
சீரகப் பொடி – ¼ டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

  • வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  • தட்டு வடையை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, உடைத்த தட்டுவடை சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, புதினா/கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகப் பொடி என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி!!!
  • மாலை நேரத்தில் சாப்பிட அருமையான சாட் ஸ்நாக்ஸ் ரெடி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here