Home மகளிர் மட்டும் கலக்கலான மதிய உணவு வெஜிடபிள் புலாவ்

கலக்கலான மதிய உணவு வெஜிடபிள் புலாவ்

164
0

கலக்கலான மதிய உணவு வெஜிடபிள் புலாவ்

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 2 கப்
தண்ணீர் – 4 கப்
வெங்காயம் -2
பச்சை மிளகாய் – 2
பச்சை பட்டாணி – 3 டேபிள் ஸ்பூன்
சிறிய கேரட் – 1
பீன்ஸ் – 4
காலிப்ளவர் – 5 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
முந்திரி பருப்பு – சிறிதளவு.
பிரிஞ்சி இலை – 1
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு .
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

  • முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
  • காலிப்ளவர், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, முந்திரி பருப்பு போட்டு தாளித்த பின்னர் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • இவை எல்லாம் நன்றாக வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் நீர் சேர்க்கவும்.
  • தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், காலிப்ளவர், பட்டாணி, கொத்தமல்லி தழை சேர்த்து மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கலந்து மூடி போட்டு வேகவிடவும்.
  • 5 நிமிடத்திற்கு ஒருமுறை அரிசி உடையாமல் நிதானமாக கலந்து விட்டு நீர் சிறிது வற்றியதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் அப்படியே வேக விடவும்.
  • 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கம கம வாசனையுடன் பொல பொலவென சுவையான புலாவ் பரிமாறத்தயார்.
  • சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here