Home மகளிர் மட்டும் உருளைக்கிழங்கு தயிர் பச்சடி

உருளைக்கிழங்கு தயிர் பச்சடி

170
0

உருளைக்கிழங்கு தயிர் பச்சடி

என்னென்ன தேவை?

பெரிய உருளைக்கிழங்கு – 1,
உப்பு – சிறிது,
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
கெட்டித் தயிர் – 1½ கப்,
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்,
தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – சிறிது.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து துருவிக் கொள்ளவும். தயிரை கடைந்து அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், இஞ்சி சேர்த்து கலக்கவும். இத்துடன் உருளைக்கிழங்கு, உப்பு போட்டு கலந்து கொத்தமல்லித்தழையை தூவி கடுகு தாளித்து கொட்டி பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here