Home மகளிர் மட்டும் இரும்பு சத்துமிக்க சுவையான முருங்கைப்பூ கூட்டு

இரும்பு சத்துமிக்க சுவையான முருங்கைப்பூ கூட்டு

211
0

இரும்பு சத்துமிக்க சுவையான முருங்கைப்பூ கூட்டு

என்னென்ன தேவை?

முருங்கைப்பூ – – ஒரு கப்
பாசிப்பருப்பு – – கால் கப்
தேங்காய்த் துருவல் – – 5 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கடுகு, சீரகம் – – தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – – தலா ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதலில் முருங்கைப்பூவைச் சுத்தம் செய்து பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஒரு ஜாரில் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு சூடான பின் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இப்போது அரைத்த விழுது, பருப்புக் கலவை, உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். முருங்கைப்பூ கூட்டு ரெடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here