Home யாவரும் நலம் வயிற்று புண்களை ஆற்றும் அருகம்புல்

வயிற்று புண்களை ஆற்றும் அருகம்புல்

163
0

வயிற்று புண்களை ஆற்றும் அருகம்புல்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்று புண்களை ஆற்றக்கூடியதும், உடலுக்கு பலம், குளிர்ச்சியை தரவல்லதும், தோல் வியாதிகளை போக்க கூடியதுமான அருகம்புல்லின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.
அருகம்புல்லில் பல்வேறு நன்மைகள் உள்ளன. காலை வேளையில் அருகம்புல் மீது வெறும் காலில் நடப்பதால் மன உளைச்சல் மறைந்து போகும். பாதங்களில் நரம்பு முடிச்சுகளை தூண்டி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அருகம்புல்லில் புரதச்சத்து, இரும்புச்சத்து அதிகளவில் உள்ளன. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இதில் அருமையான மருத்துவ குணங்கள் உள்ளன.
அருகம்புல்லை பயன்படுத்தி வயிற்றில் ஏற்படும் புண்களை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

அருகம்புல், வெண் மிளகுப்பொடி, வெண்ணெய்.

செய்முறை:

50 மில்லி அருகம்புல் சாறுடன் சிறிது வெண் மிளகுப்பொடி சேர்த்து நீரில்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறுநெல்லிக்காய் அளவுக்கு வெண்ணெய் சேர்க்கவும். இது உருகியதும் வடிகட்டி குடித்துவர வயிற்று புண்கள் குணமாகும். ரத்தம் சுத்தமாகும். உடலுக்கு பலம், குளிர்ச்சியை தருகிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. வெள்ளைபோக்கை சரிசெய்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. சிறுநீரோடு ரத்தம் வெளியேறுவதை தடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here