Home யாவரும் நலம் பொன்னாங்கண்ணி மருந்தாகும் விதம்

பொன்னாங்கண்ணி மருந்தாகும் விதம்

170
0

பொன்னாங்கண்ணி  மருந்தாகும் விதம்:

  • பொன்னாங்கண்ணியை உப்பு ேசர்க்காமல் வேக வைத்து, இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டுவர கண் பார்வை தெளிவு பெறும்.
  • பொன்னாங்கண்ணி சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய்ச்சாறு, பசுவின் பால், கரிசலாங்கண்ணி சாறு இவை சம அளவு எடுத்து இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்துக் காய்ச்சி மெழுகு பதத்தில் வந்ததும் வடிக்கட்டி, தலைக்குத் தேய்த்து குளித்துவர கண் நோய்கள் தொலைந்து போகும்.
  • பொன்னாங்கண்ணி கீரையை நெய்யிட்டு வதக்கி உடன் மிளகு, உப்பு போதிய அளவு சேர்த்து கற்ப மருந்தாக ஒரு மண்டலம்(48 நாட்கள்) உண்ண உடலுக்கு வனப்பு, பொன் நிறம், கண்களுக்கு குளிர்ச்சி ஆகியன உண்டாகும். கண் புைகச்சல், கண் எரிச்சல், ஈரல் நோய்கள் போன்றவை குணமாகும்.
  • ஒரு பிடி பொன்னாங்கண்ணி கீரையை காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்றுவிட்டு பசும்பால் அருந்தி வர உடல் குளிர்ச்சி பெறும். ஈரல் நோய்கள் இல்லாது போகும். கண் நோய்கள் நீங்கிப் பார்வையும் தெளிவு பெறும்.
  • எலுமிச்சம் பழ அளவு பொன்னாங்கண்ணியின் வேரை எடுத்து சுத்திகரித்து 2 லிட்டர் எருமைப்பால் விட்டு கலக்கி காய்ச்சி தயிராக உறைய வைத்து கடைந்தெடுத்த வெண்ணெயை மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு விட்டு மோரையும் குடித்து வர சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.
  • பொன்னாங்கண்ணி கீரை பொன்மேனி தருவதோடு, கண்களுக்கு நன்மையையும், தலைமுடிக்கு வளத்தினையும், ரத்த சுத்தியையும், ரத்தப் பெருக்கையும், உடல்குளிர்ச்சியையும் தரக்கூடிய பொன்னான கீரை என்பதை நினைவில் நிறுத்தி நித்தமும் பயன்படுத்துவோர் நூறாண்டு வாழ்வர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here