Home யாவரும் நலம் பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்

167
0

பொன்னாங்கண்ணியின் மருத்துவக்குணங்கள் :

  • இன்று தங்க பஸ்பம் என்பது கோடீஸ்வரர்களுக்குக் கூட எட்டாத ஒரு மருந்தாகி விட்டது. ஆனாலும், அதை ஏழைகளும் பலன் பெறும் விதத்தில் இறைவன் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்று. நவீன மருத்துவத்தில் Gold chloride என்று தங்கத்தை உப்பு நிலையில் மாற்றி மருந்தாகக் கொடுப்பர். இது உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது. இதுபோல் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து தங்க பஸ்பத்தின் மூலம் அடைகிற பலனை அன்றாடம் பயன்படுத்துகிற பொன்னாங்கண்ணி கீரையின் மூலமாகவே நாம் பெற முடியும்.
  • பொன்னாங்கண்ணி தாய்ப்பாலை பெருக்கக்கூடிய ஒன்று, பித்தப்பையை சீர் பெற இயங்கச் செய்யக் கூடியது, இந்திய ஆயுர்வேத மருத்துவ நூல் பொன்னாங்கண்ணியின் சமூலம்(இலை முதல் வேர் வரையிலான முழு செடியும்) ரத்தத்தில் உள்ள குற்றங்களையும், தோல் நோய்களையும் போக்கக்கூடியது என்றும் பரிந்துரைக்கிறது.
  • பொன்னாங்கண்ணி தூக்கத்தைத் தூண்டக் கூடியது. மத்திய நரம்புக் கூட்டத்தை சீர் செய்து சாந்தப்படுத்தக் கூடியது. இதனால் பல்வேறு நரம்பு நோய்கள் இல்லாமல் போகின்றன.
  • பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது, கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி,மயக்கத்தைத் தணிக்கக் கூடியது.
  • பொன்னாங்கண்ணிச்சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. எவ்வகையிலேனும் ஏற்படும் ரத்த வாந்தியை நிறுத்தக் கூடியது.
  • பொன்னாங்கண்ணி ஈரலை பலப்படுத்தவல்லது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகக் கூடியது.
  • பொன்னாங்கண்ணிக் கீரையை உள்ளுக்கு சாப்பிடுவதாலும் எண்ணெயில் இட்டு (நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்) நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலை முடி செழுமையாக வளரும். உடலும் உஷ்ணம் நீங்கி குளிர்ச்சி பெறும்.
  • பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் ரத்த அழுத்தம் குறைவுபடும். இரைப்பைக் கோளாறுகள் இல்லாமல் போகும், கொனேரியா என்னும் பால்வினைநோய் குணமாகும்.
  • பொன்னாங்கண்ணிக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்கக் கூடிய அற்புதமான மருந்தாகும்.
  • பொன்னாங்கண்ணியை மேற்பூச்சி மருந்தாப் பயன்படுத்தும்போது முகப் பருக்கள் போவதோடு கரும் புள்ளிகளும் காணாமற்போகும். முகமும் பொலிவுடன் திகழும்.
  • பொன்னாங் கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஒரு துணை மருந்து ஆகிறது.
  • பொன்னாங்கண்ணி சிறுநீரைப் பெருக்குந் தன்மை உடையது. பேதி மற்றும் சீதபேதியைக் கண்டிக்க வல்லது. தலைவலி, தலைச்சுற்றலை தணிக்க வல்லது. குடலிறக்க நோயான ‘ஹெர்னியா’ தணிவதற்குத் துணையாவது.
  • பொன்னாங்கண்ணி நெஞ்சுச் சளியைக் கரைக்க வல்லது. மார்பு இறுக்கத்தைப் போக்கவல்லது. ஆஸ்த்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்ற வல்லது. மூலத்தையும் குணப்படுத்தவல்லது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here