Home யாவரும் நலம் பிளாக் டீ – கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்?

பிளாக் டீ – கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்?

198
0
பிளாக் டீ – கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்?

தேநீர் அருந்துவதால் சரும புற்று நோய் வராமல் தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பிளாக் டீ, கிரீன் டீயின் எது உடலுக்கும் நல்லது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேநீர் அருந்துவதால் சரும புற்று நோய் வராமல் தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால் பற்கள் சொத்தையாகாமல் காக்கிறது. கருப்பு தேயிலை மற்றும் பச்சை தேயிலை ஆகிய இரண்டுமே பயிரிடப்படுவதில் ஒற்றுமை இருந்தாலும் அதன் அறுவடையில் வித்தியாசப்படுகிறது.

பிளாக் டீ என்பது கருப்பு தேயிலை இரசாயனக் கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுகிறது.. ஆனால் கிரீன் டீயின் பச்சை தேயிலை அவ்வாறு ஆக்ஸிஜனுடன் சேர்க்கப்படுவதில்லை. பிளாக் டீயில் 10% பாலிபீனால்களுள்ளது. கிரீன் டீயில் 40% பாலிபீனால்கள் உள்ளது.

கருப்பு தேநீர் (பிளாக் டீ ) பயன்கள்: கருப்பு தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை சர்க்கரை அல்லது பால் போன்ற எந்தவொரு சேர்க்கையும் இல்லாமல் அருந்துவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

1. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.

2. வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் பிளாக் டீயின் பங்கு அதிகமானது.

3. இதில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.

4. பிளாக் டீயில் உள்ள ஒரு பதன பொருள் வைரஸிலிருந்து உடலை காத்து நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

5. பிளாக் டீயில் அமினோ ஆசிட் இருப்பதால் நமது கவனம் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here