Home யாவரும் நலம் பருப்பு கீரையை கொண்டு அக்கி, அம்மை கொப்புளங்களை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

பருப்பு கீரையை கொண்டு அக்கி, அம்மை கொப்புளங்களை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

189
0

பருப்பு கீரையை கொண்டு அக்கி, அம்மை கொப்புளங்களை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பருப்பு கீரை, சீரகம், மஞ்சள்.

செய்முறை:

பருப்பு கீரையை துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேனீரை வடிக்கட்டி குடித்துவர அக்கி, அம்மை கொப்புளங்கள், வியர்குரு நீங்கும். பருப்பு கீரையின் தண்டு பகுதியில் சாறு எடுத்து பூசிவர அக்கி புண்களால் ஏற்படும் எரிச்சல் சரியாகும். நீர்ப்பாங்கான இடங்களில், புல்வெளிகளில், தோட்டங்களில் வளர்ந்து பயன்தரும் இந்த கீரை புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. காய்ச்சல், எரிச்சல், நெறிக்கட்டுதல் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்கிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here