Home யாவரும் நலம் நெஞ்சுக் கோளாறுகளை போக்கும் தும்பை

நெஞ்சுக் கோளாறுகளை போக்கும் தும்பை

183
0

நெஞ்சுக் கோளாறுகளை போக்கும் தும்பை:

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நெஞ்சக சளி, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றை சரிசெய்யும் மருத்துவத்தை காணலாம். தும்பை, அரிசி திப்லி ஆகியவை இப்பிரச்னைகளுக்கு அற்புதமான மருந்தாகிறது.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது தும்பை. பித்தசமனியாக விளங்குகிறது. தும்பையின் பூ, இலை, வேர் ஆகியவை பயன்தருகிறது. அரிசி திப்லி உள் உறுப்புகளை தூண்டும் தன்மை கொண்டது. செரிமானத்தை சீர் செய்யும். நெஞ்சக சளியை வெளியேற்றுகிறது. கோடை மற்றும் குளிர்காலத்தில் தொற்றுநோய் வராமல் தடுக்கிறது.

தும்பையை பயன்படுத்தி நெஞ்சக கோளாறுகளை சரிசெய்யும் ரசம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தும்பை இலை, பூ, நல்லெண்ணெய், வரமிளகாய், பூண்டு, கடுகு, புளிகரைசல், மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். இதில் கடுகு போட்டு பொறிந்ததும் வரமிளகாய், பூண்டு பற்கள் தட்டி போடவும். இதில் தும்பையின் இலை, பூக்களை சுத்தப்படுத்தி போட்டு வதக்கவும். பின்னர் புளிகரைசல் சேர்க்கவும். இதில், நீர்விட்டு மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து லேசாக கொதிக்க வைக்கவும். இந்த ரசத்தை குடித்துவர நெஞ்சக கோளாறுகள் சரியாகும்.

தும்பை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நுண்கிருமிகளை அழிக்கும். தும்பையை துவையல், ரசமாக செய்து சாப்பிட்டுவர நெஞ்சக சளி, வயிற்றுகோளாறுகள், மலச்சிக்கல், பித்தம், மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here