Home யாவரும் நலம் நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய நினைவாற்றலை பெருக்கும் வல்லாரை கீரை

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய நினைவாற்றலை பெருக்கும் வல்லாரை கீரை

164
0

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய நினைவாற்றலை பெருக்கும் வல்லாரை கீரை :

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில், உடல் சோர்வினை அகற்றி மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யக்கூடியதும், தொழுநோய்களை குணப்படுத்தும் வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.‘பிரம்மி’ என்றழைக்கப்படும் வல்லாரை கீரையில் தலை சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ஏ, சி மற்றும் தாது உப்புக்களும், இரத்தத்துக்கு தேவையான சத்துக்களும் அதிக அளவில் உள்ளது. இக்கீரை இதயத்துக்கு வலுசேர்க்கிறதாகவும், மனத்திற்கு மென்மை உணர்வையும் தரக்கூடியது. சிரங்கு, தோல் நோய், குஷ்டத்திலிருந்து பாதுகாக்கிறது. அன்றாடம் மூன்று வல்லாரைக்கீரையை உட்கொள்வதால், முதிர்வை தடுக்கிறது. பல்வேறு சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரையை பயன்படுத்தி வயிற்று பிரச்னைகளுக்கான தேநீர் தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: வல்லாரை கீரை, வெந்தயம், கற்கண்டு. பாத்திரத்தில் தண்ணீருடன், வல்லாரை கீரை, வெந்தயம், கற்கண்டு சேர்த்து கொதிக்கவிடவும். இந்த தேநீரை அதிகாலையில் குடித்து வர வயிறு தொடர்பான உபாதைகள், பெண்களுக்கான இடுப்பு வலி, சிறுநீர் தாரையில் ஏற்படுகின்ற வீக்கம், அரிப்பு போன்ற நோய்கள் குணப்படும். வெள்ளைப்படுதல் நோய்க்கு சிறந்த மருந்தாகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here