Home யாவரும் நலம் சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் கொத்துமல்லி

சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் கொத்துமல்லி

174
0

சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் கொத்துமல்லி

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பருத்திப்பாலின் நன்மைகள், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் கொத்தமல்லி பானம் குறித்து பார்க்கலாம்.ஆடைக்கு பயன்படுவது பருத்தி. இதன் விதைகள் சத்தூட்டமான உணவாக விளங்குகிறது. பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும்.

இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.உடலுக்கு பலம் கொடுக்கும் பருத்தி விதை பால் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பருத்தி விதை, அரிசி மாவு, தேங்காய் பால், ஏலக்காய் பொடி, வெல்லக்கரைசல்.

செய்முறை:

6 முதல் 8 மணி நேரம் பருத்தி விதைகளை ஊறவைக்கவும். இதை அரைத்து வடிகட்டி பால் எடுத்து சிறிது நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது அரிசி மாவு சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் பொடி, வெல்லக்கரைசல் சேர்த்து கலந்து குடித்துவர உடலுக்கு பலம் கொடுக்கும். இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும். வயிற்று புண் குணமாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here