Home யாவரும் நலம் கொத்துமல்லியை பயன்படுத்தி கண் எரிச்சல், சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் பானம் தயாரிக்கலாம்.

கொத்துமல்லியை பயன்படுத்தி கண் எரிச்சல், சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் பானம் தயாரிக்கலாம்.

187
0
கொத்துமல்லியை பயன்படுத்தி கண் எரிச்சல், சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் பானம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய், கொத்துமல்லி, தேன்.

செய்முறை:

நெல்லிக்காய், கொத்துமல்லி சாறு தலா 50 மில்லி எடுக்கவும். இதனுடன், 10 மில்லி தேன் சேர்த்து கலந்து குடித்துவர கண் எரிச்சல் சரியாகும். ரத்த ஓட்டத்தை சீர் செய்யும். ரத்த அழுத்தத்தை குறைத்து சமன்படுத்துகிறது. இதய ஓட்டம் சீராகிறது.

சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும். சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும். ரத்தநாளங்களில் ஏற்படும் அடப்புகளை சரிசெய்வதால் மாரடைப்பு, கைகால் வலி போன்ற பிரச்னைகளை போக்குகிறது. கொத்துமல்லி உணவுக்கு மனம், சுவைக்காக சேர்க்கப்படுகிறது.

கொத்துமல்லி சாறை மேல்பற்றாக போடும்போது கைகால், உடலில் எரிச்சல் போக்கும்.கால்களில் நரம்புகள் சுற்றிக்கொள்வதால் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னையால் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

கால் வலி ஏற்படும். அடிபட்டால் அதிகமாக ரத்தம் வெளியேறும். அன்னாசி சாறுடன் சீரகப்பொடி சேர்த்து கலந்து குடித்துவர நரம்பு முடிச்சு வெகுவிரைவில் சரியாகும்.

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here