Home கல்வி உலகம் பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

235
0

பொது அறிவு வினா விடைகள்

பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? – 330

உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? – நெதர்லாந்து.

உலகின் மிகச் சிறிய சந்து எது? – புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.

உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? – இந்தோனேஷியா

உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? – சீராப்புஞ்சி

உலகிலேயே மிக நீளமான மலை எது? – அந்தீஸ்மலை

உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ? – நார்வே அரசு

கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது? – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? – அக்டோபர் 1

உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்

மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது? – அயர்லாந்து

முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது? – அனிச்சம்

உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு எது? – சுவீட்சர்லாந்து

மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது? – ரெயின் கேஜ்

பூனையின் கண்பார்வை மனிதனைவிட எத்தனை மடங்கு கூர்மையானது? எட்டு

உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? – 12,500

உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது? – டென்மார்க்

கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ? – இங்கிலாந்து

உலகின் இரண்டாவது பெரிய சிகரம்? – மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்)

எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது? – அர்ஜென்டீனா மற்றும் உருகுவே

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here