Home கல்வி உலகம் நான்காம் தொழில்புரட்சி

நான்காம் தொழில்புரட்சி

153
0

நான்காம் தொழில்புரட்சி

Technology

மூன்றாம் தொழில்புரட்சியின் நீட்சியே நான்காம் தொழில்புரட்சி. இதில் Internet of Things (IOT), Big Data, Nano Technology, Robatics, Quantum computing, Bio Technology, 3D printing, Artificial Intelligence தொழில்நுட்பங்கள் புதுவரவுகளாகவும், இவற்றில் சில ஆய்விலும், இன்னும் சில முன்பே அறிமுகப்படுத்தப்பட்டும் உள்ளன.

Big Data

பிக் டேட்டா எனப்படும் இந்தத் தொழில்நுட்பம் நான்காம் தொழில்புரட்சிக்காலத்தின் உன்னத வளர்ச்சியாகும். உதாரணமாக, சென்னையில் வாழும் ஒருவரின் பெயர், முகவரி, கைபேசி எண், வீட்டிலிருக்கும் எரிவாயு கனெக்‌ஷன் எந்த கம்பெனி என்பது, அவர் பயன்படுத்தும் டிஷ் டீவி, லேப்டாப், கம்ப்யூட்டர், ஃபர்னிச்சேர் வாங்கிய கடை, ஆடை ஆபரணங்களை தொடர்ந்து எங்கு வாங்குகிறார் என்ற விவரம், திரைப்படம் பார்க்க விரும்பிச் செல்லும் சினிமா தியேட்டர், ரெஸ்ட்டாரென்ட், பனியன் மற்றும் டி-ஷர்ட் பிராண்ட், பயன்படுத்தும் டூ வீலர் என ஜாதகமே சேகரிக்க முடியும் என்றால் அதற்கு பிக் டேட்டாவின் வளர்ச்சியே காரணமாக அமையும்.

Robatics

ரோபோட்டிக்ஸ் (Robotics) எனப்படும் தொழில்நுட்பம் பல்வேறு உற்பத்தித் தொழில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Nano Technology

நானோ தொல்நுட்பம் (Nano Technology) எனப்படும் தொழில்நுட்பம் நுண்ணிய மூலக்கூறு அளவில் பொருட்களைக் கையாளும் தொழில்களில் பெரும் வளர்ச்சியை உண்டாக்கும்.

Quantum Computing

குவான்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) கம்ப்யூட்டர்களின் செயற்திறனை பலமடங்கு உயர்த்தும் என கருதப்படுகிறது.

Biotechnology

பயோடெக்னாலஜி (Biotechnology) என்பது நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். இதன் அடிப்படையிலான வளர்ச்சியும் நான்காம் தொழில்புரட்சிக் காலத்தின் சிறப்பம்சமாகும்.

3D printing

முப்பரிமாணஅச்சுத் தொழில்நுட்பம் (3D Printing) நான்காம் தொழில்புரட்சிக் காலத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாகும். இதன் வளர்ச்சியும் நம் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்திப் பயன்படுத்த உதவி செய்யும்.

Artificial Intelligence

நான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கதாகும். கம்ப்யூட்டரையோ அல்லது கம்ப்யூட்டரால் இயங்கும் ரோபோவையோ அல்லது சாஃப்ட்வேரையோ மனிதனைப் போலவே சிந்தித்துச் செயல்பட வைக்கும் தொழில்நுட்பமாகும்.

வீடியோ கேம்கள், கண்காணிப்பு கேமராக்கள், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வழிகாட்டிச் செல்லும் நேவிகேஷன் மேப்கள் (Navigation & Map), ஃபேஸ்புக்கில் பயன்படும் உருவத்தை அடையாளம் காட்டும் நுட்பம் (Image Recognition), ஆப்பிள் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சிரி (Siri) போன்றவை ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here