Home கல்வி உலகம் ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி

ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி

169
0

ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி

காரைக்காலில், ஓடும் ரயிலில் நடந்த ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி ஓவியப்பள்ளி சார்பில், காரைக்காலில் முதல் முறையாக ஓடும் ரயில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். அவர்களில் சிறப்பாக ஓவியம் வரைந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள ஓவியப்பள்ளியில் பரிசு வழங்கப்பட்டது.

ஓவியப்பள்ளி முதல்வர் இபேர் தலைமை தாங்கினார். தமிழ்ச்சங்க பொருளாளர் சீனு மோகன்தாஸ் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். ஓவியர் செல்வம் எமில் வரவேற்றார். ஜோஸ்மின் தொகுத்து வழங்கினார். ராமலிங்கம் நன்றி கூறினார். ஓவியர்கள் கார்முகிலன், கவுதம் வரதராஜ், விக்னேஷ்வரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here