Home கல்வி உலகம் உலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு இங்கு தேர்வுகளே கிடையாது

உலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு இங்கு தேர்வுகளே கிடையாது

176
0

உலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு இங்கு தேர்வுகளே கிடையாது

உலகிலேயே மிக வெற்றிகரமான கல்விமுறையை ஃபின்லாந்து நாடு பின்பற்றுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அங்கு மாணவர்கள் மிகக் குறைந்த நேரமே பள்ளியில் செலவிடுகிறார்கள். அதுமட்டுமில்லை. தேர்வுகளும் வீட்டுப்பாடங்களும் மிகக் குறைவே சர்வதேச மாணவர் மதிப்பீட்டின்படி, ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, மற்ற நாடுகளைவிட அதிக நேரம் படிப்பதில் செலவிடுகிறார்கள்.ஆனால், 1960களின் இறுதிவரை, 10 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே மேல்நிலைபள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள்.

புதுமையான சீர்த்திருத்தங்கள்:

பெருஸ்கூலு (peruskoulu) – ஃபின்லாந்தின் கட்டாய கல்வித்திட்டத்தின் வெற்றிக்கதை இதுதான். 1970களின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், 1990களில் பல புதுமையான சீர்திருத்தங்களால் மேம்படுத்தப்பட்டது. ஃபின்லாந்தின் இந்த அற்புதமான கல்விமுறையை குறித்து தெரிந்து கொள்ள பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் அங்கு செல்கின்றனர். கல்விக் கொள்கைகள் மட்டும் அல்லாது பயனுள்ள சமூக கொள்கைகளும், இந்த உயர்தர கல்விமுறைக்கு காரணமாகும் என்று அவர்களுக்கு கூறப்பட்டது.

ஃபின்லாந்தின் இந்த திட்டத்தின் வெற்றிக்கு, கல்வி சார்ந்த காரணிகள் மட்டுமே அடிப்படை என்று கூறமுடியாது” என்கிறார் அந்நாட்டை சேர்ந்த ஆசிரியர், ஆய்வாளர் மற்றும் கொள்கை ஆலோசகரான பசி சல்பர்க். “மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதில் ஃபின்லாந்து அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகள் 7 வயதில் பள்ளிக்கு செல்ல, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஏற்ற சூழலை அரசு உருவாக்கி தருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here