Home நாட்டு நடப்பு நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா – இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா – இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு

171
0

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா – இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு

இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக அதி நவீன பீரங்கிகளை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் 145 எம்777 ரக பீரங்கிகளை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதேபோல் இந்தியாவின் லார்சன் அண்ட் டப்ரோ நிறுவனத்திடம் ரூ.4,366 கோடிக்கு கே9 வஜ்ரா என்னும் நவீன ரக பீரங்கியும் வாங்குவதற்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ராணுவத்தில் தற்போதுள்ள பழைய பீரங்கி வாகனங்களை அகற்றும் வகையில் ‘கம்போசிட் கன் டோவிங் வெகிகிள்’ என்னும் நவீன பீரங்கி வாகனமும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த 3 வித நவீன பீரங்கிகளும் இந்திய ராணுவத்தில் நேற்று முறைப்படி சேர்க்கப்பட்டது.



 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here