Home நாட்டு நடப்பு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்

242
0

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச குழு ஒன்றையும் அறிவித்து இருந்தார். அதன்படி துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவினர் கூட்டணி பற்றி பேசி வருகிறார்கள். விஜயகாந்த் நாடு திரும்பிய பிறகு அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதி காலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். விஜயகாந்தை வரவேற்க மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிகாலையில் குவிந்தனர். பன்னாட்டு முனையத்தில் பிரேமலதா, மகன் பிரபாகரன் உடன் தங்கி இருந்த விஜயகாந்த் காலை சிற்றூண்டியை அங்கேயே முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

விஜயகாந்த் 7 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் எதற்காக தங்கி இருந்தார் என்ற கேள்வி தொண்டர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் எழுந்தது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியதால் நல்ல நேரம் பார்த்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது குடும்பத்தினர் விமான நிலையத்தில் தங்கும்படி கூறியதால் அவர் விமான நிலையத்தில் நீண்ட நேரம் ஓய்வு எடுத்தார்.

விஜயகாந்தின் வருகை தே.மு.தி.க. தொண்டர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. இழந்த சரிவை நிலைநாட்ட பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் கட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தொண்டர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here