Home நாட்டு நடப்பு தங்கம் விலை ஒரே நாளில் ரூ.192 உயர்வு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.192 உயர்வு

146
0

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.192 உயர்வு

திருமண சீசன் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை திடீரென்று உயர்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 1 மாதமாகவே ஆபரண தங்கம் கிராம் ரூ.3000-க்கு மேல் விற்பனையாகி வருகிறது.

இது படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.3075 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.24-ம் பவுனுக்கு ரூ.192-ம் உயர்ந்தது. 22 கேரட் தங்கம் விலை இன்று காலை கிராம் ரூ.3075-க்கும் விற்பனையானது. ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.24,600 ஆக உள்ளது. வெள்ளி விலை கிராம் ரூ.42.80 ஆகவும், 1 கிலோ ரூ.42,800 ஆகவும் இருந்தது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here