Home நாட்டு நடப்பு குடியரசு தின கொண்டாட்டம்- டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி

குடியரசு தின கொண்டாட்டம்- டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி

128
0

குடியரசு தின கொண்டாட்டம்- டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி

குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற கோலாகலமான நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்சம் மக்கள் திரண்டுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில், ஆளுநர் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here