Home நாட்டு நடப்பு உடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்

உடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்

156
0

உடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்

மத்திய பா.ஜனதா அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார். வயது 59. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் புற்றுநோய் காரணமாக அவதிப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் அனந்தகுமார் அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அனந்த குமார் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அவருக்கு அரசு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அனந்த குமாருக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, தேசிய கல்லூரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here