Home அழகப்பா பல்கலைக்கழகம் முனைவர் எஸ். ரவிக்குமார் அவர்களுக்கு ஸ்ரீ பி.கே. தாஸ் நினைவு வாழ்நாள் சாதனையாளர்...

முனைவர் எஸ். ரவிக்குமார் அவர்களுக்கு ஸ்ரீ பி.கே. தாஸ் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது

168
0

முனைவர் எஸ். ரவிக்குமார் அவர்களுக்கு ஸ்ரீ பி.கே. தாஸ் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது

அழகப்பா பல்கலைகழகத்தில் உயிர் மருத்துவ அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் முனைவர் எஸ். ரவிக்குமார் அவர்கள் நேரு கல்விக் குழுமம், கோயம்புத்தூர் மூலமாக ஸ்ரீ பி.கே. தாஸ் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். இவ்விருது பேராசிரியர் ரவிக்குமார் அவர்கள் உயிர் அறிவியலில் கடந்த 18 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்கான நேர்முகத் தேர்வு 02.12.2018 அன்று நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நேர்முகத் தேர்வில் அதிகபட்சமாக 200க்கு 189 மதிப்பெண்கள் பெற்று முதல் நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருதினை AICTE நிறுவனத்தின் தலைவர் திரு. எம்.பி. பூணியாவும் மற்றும் தமிழ்நாடு Principal chief Conservator of Forest (PCCF) முனைவர் ஆர்.கே. உபாத்யாய் அவர்கள் வழங்கினார்கள். இவர் ஏற்கனவே 2010ம் ஆண்டிற்கான சிறந்த கடல் அறிவியல் ஆராய்ச்சிக்காக விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தற்சமயம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திட்டக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் அதே பல்கலைக்கழகத்தில் செனட் மற்றும் உயர்தர மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக இருந்துள்ளார்.

இவர் 29 பி.எச.டி ஆராய்ச்சி மாணவர்களுக்கும் 44 எம்.பில். மாணவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் இவர் சுமார் 185.84 இலட்சம் ரூபாயை பல்வேறு தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (DST, ICMR, UGC, DST-NRDMS, SERB, GOMBRT-UNDP, UGC-BSR) மூலமாக பெற்று பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துள்ளார். குறிப்பாக கடல் உயிரினங்களிலிருந்து மலேரியா வியாதிக்கான மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இவர் ஜெர்மனி, மலேசியா, தாய்லாந்து, மொரிஷியஸ் மற்றும் சீனா நாடுகளுக்குச் சென்று தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இதுவரைக்கும் சுமார் 144 ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேசிய மற்றும் உலகளாவிய நாளேடுகளில் வெளியிட்டுள்ளார்.

விருது பெற்ற பேரா. எஸ்.ரவிக்குமார் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. என்.ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here