Home அழகப்பா பல்கலைக்கழகம் மகளிர் ஹாக்கிப் போட்டி

மகளிர் ஹாக்கிப் போட்டி

180
0

மகளிர் ஹாக்கிப் போட்டி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மகளிர் ஹாக்கிப் போட்டியில் நடைபெற்ற (30.11.2018) முன் காலிறுதி மற்றும் காலிறுதிப் போட்டிகளின் விபரம் வருமாறு.

முன் காலிறுதி போட்டியில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் அணி மதுரை காமராசர் பல்கலைக்கழக அணியை 4 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், திருவனந்தபுரம், கேரளா பல்கலைக்கழக அணி சென்னை பல்கலைக்கழக அணியை 4 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அணி 6 – 0 என்ற கோல் கணக்கில் பெல்காவி, விஸ்வேரய்யா தொழிட்நுட்ப பல்கலைக்கழக அணியை வீழ்த்தியது. கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி 11 – 0 என்ற கோல் கணக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணியை வீழ்த்தியது.

முன் காலிறுதி போட்டிகளை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களை பற்றிய விபரம் வருமாறு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அணி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அணியை 5 – 0 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக அணி, கர்நாடகா மைசூர் பல்கலைக்கழக அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த கோழிக்கோடு பல்கலைக்கழக அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் திருவனந்தபுரம், கேரளா பல்கலைக்கழக அணியை வென்றது. நான்காவது ஆட்டத்தில் கர்நாடகா மங்களுர் பல்கலைக்கழக அணி 4 – 1 என்ற கோல் கணக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக அணியை வென்றது.

லீக் சுற்று ஆட்டங்கள் 1.12.2018 (சனிக்கிழமை) முதல் நடைபெறுகின்றது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here