Home அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாடு மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் 2018

தமிழ்நாடு மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் 2018

202
0

தமிழ்நாடு மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் 2018

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மகளிரியல் துறை மற்றும் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும், மதுரை நேட்டிவ்லீடு நிறுவனமும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான “தமிழ்நாடு மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் 2018 (TamilNadu Students Innovators 2018) பற்றிய தொழில் முனைவேரர் விழிப்புணர்வு நிகழ்வு 29.10.2018 அன்று தொழில்துறை வேதியியல் கருத்தரங்கில் நடைபெற்றது.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய அழகப்பா பல்கலைக்கழக கலைப்புல முதன்மையர் மற்றும் மகளிரியல் துறைத் தலைவருமான பேராசிரியர் கா.மணிமேகலை அவர்கள் அனைவரையும் வரவேற்று இந்நிகழ்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.  அவர்கள் ஆற்றிய உரையில், இந்த TNSI 2018 விழிப்புணர்வு நிகழ்வின் நோக்கம், சிறந்த 100 புதுமையான கருத்துக்களை கண்டறிதல், அங்கீகரித்தல், ஆதரவளித்தல், மேலும் மாணவர் குழுக்களின் தனிநபரின் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் முனைப்புகளைத் தேடுதல் பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியைத் தலைமை ஏற்றுத் தொடங்கி வைத்த அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். ராஜேந்திரன் அவர்கள் தம் உரையில் தொழில் முனைவேராவதற்கு வயது ஒரு முக்கியமில்லை. இளைஞர்களில் பலர் தொழில் முனைவோரவாதற்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருக்கின்றனர். இளைஞர்கள் தங்களுடைய புதுமையான கருத்துக்களை நடைமுறைப்படுத்தி தொழில்முனைவேராவதற்கு இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஊக்குவிக்கும் வகையில் உறுதுணையாக இருக்கும். இந்நிகழ்வின் மூலம் கலந்து கொண்ட மாணவர்களில் குறைந்தது 10மூ தொழில்முனைவோராகி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பார்கள்.

இவ்விழிப்புணர்வு நிகழ்வில் மதுரை பாஸ்ட்ரா தொழில் நுட்பத்தின் நிறுவனர்   திரு. கார்த்திக்கேயன் மற்றும் பெப்பர்லேன் என்லைட்மென்ட் சொலுசன்ஸ் நிறுவனர் திரு. எஸ்.பி. ராஜர் ஆகியோர் பயிற்சியாளர்களாக வருகைதந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர். இவ்விழாவின் முடிவில் நேட்டிவ்லீடு நிறுவனத்தின் ஸ்டார்ட் அப்  ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரி அவர்கள் நன்றியுரை கூறினார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here